​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தானில் தனது கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ்

Published : Apr 25, 2024 6:26 AM

ராஜஸ்தானில் தனது கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ்

Apr 25, 2024 6:26 AM

தனது கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் வித்தியாசமான நிலை காங்கிரசுக்கு ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பான்ஸ்வாரா தொகுதியில் அரவிந்த் டாமோரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ், வேட்பு மனுவை வாபஸ் பெற ஒருநாளுக்கு முன்பு பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளர் ராஜ்குமார் ரோத்-ஐ ஆதரிப்பதாக அறிவித்தது.

ஆனால், தனது மனுவை வாபஸ் பெறாமல் அரவிந்த் தலைமறைவானதால், அவரும் களத்தில் நிற்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என காங்கிரசே இப்போது பிரச்சாரம் செய்து வருகிறது.