​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேத்தியாத்தப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published : Apr 24, 2024 10:05 PM

சேத்தியாத்தப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Apr 24, 2024 10:05 PM

சேத்தியாத்தப்பு பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கில் வராத ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பேரூராட்சி நிதி முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க கணக்கு தணிக்கை செய்யும் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்கு அந்த லஞ்சப்பணத்தை வைத்திருந்ததாக கூறப்படுவது தொடர்பாக செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை தொடருகிறது.