​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாயில் போட்டால் போதும்.. மூக்கில் கொப்பளிக்கும் வெண்புகை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ்ஸாம்..! ஸ்மோக் பிஸ்கட் அபாயம் - எச்சரிக்கை

Published : Apr 24, 2024 8:35 PM



வாயில் போட்டால் போதும்.. மூக்கில் கொப்பளிக்கும் வெண்புகை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ்ஸாம்..! ஸ்மோக் பிஸ்கட் அபாயம் - எச்சரிக்கை

Apr 24, 2024 8:35 PM

திரவ நைட்ரஜன் சேர்த்து பரிமாறப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவதால் சிறுவர் சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவற்றை வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரி எச்சரித்துள்ளார் 
 
கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் பொருட்காட்சி ஒன்றில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் கடும் குளிர் புகையை தாங்க இயலாமல் அலறித்துடிக்கும் காட்சிகள் தான் இவை..!

தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் உயிருக்கு போராடிய சிறுவன் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்ததாக கூறப்படும் இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் ஸ்மோக் பிஸ்கட் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

மைனஸ் 196 டிகிரி குளிர் நிலையில் திரவ நைட்ரஜன் உதவியால் பொங்கும் புகைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பிஸ்கட்டுகளை அப்படியே வாயில் தூக்கி போட வாயிலும் மூக்கிலும் வெண்புகை பொங்கிக் கொண்டு வரும். ஐஸ் கட்டியை அப்படியே நாக்கில் ஒட்டிக் கொள்வது போல இருக்குமாம்..!

ஸ்மோக் பிஸ்கட்டுகளை சாப்பிட்டால் அது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நடக்கின்ற திருமண விழாக்கள், பெரிய மால்கள் மற்றும் பொருட்காட்சிகளில் ஸ்மோக் பிஸ்கட்டுகள் தயார் செய்து வழக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அந்த இடங்களை ஆய்வு செய்து, இதன் பாதிப்பை எடுத்துக் கூறி, சுற்றறிக்கை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்கக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்

திரவ நைட்ரஜனை தேவைப்படும் இடத்தில் மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.