ஸ்மோக்கிங் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை
Published : Apr 24, 2024 3:09 PM
ஸ்மோக்கிங் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை
Apr 24, 2024 3:09 PM
ஸ்மோக்கிங் பிஸ்கெட் எனப்படும், திரவ நைட்ரஜனில் நனைத்து கொடுக்கப்படும் பிஸ்கெட்டுகள் உயிருக்கு ஆபத்தானவை என்பதால், அவற்றை குழந்தைகள் உட்கொள்ள பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என உணவுப்பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொண்ட சிறுவன் அதன் புகையை தாங்க முடியாமல் கூச்சலிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.