பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு... 28 செ.மீ. வரை கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published : Apr 24, 2024 8:19 AM
பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு... 28 செ.மீ. வரை கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Apr 24, 2024 8:19 AM
பனிப்பொழிவு காலம் இல்லாத நிலையிலும் பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும்பொழிவால் 20 சென்டி மீட்டர் அளவுக்கு எங்கும் பனி படர்ந்தது. தலைநகர் ஹெல்சிங்கியில் மரம், செடி, கொடிகள், வாகனங்கள், சாலைகள், கட்டிடங்கள் என எங்கு பார்த்தாலும் பஞ்சுப் போர்வை போல பனிபடர்ந்திருந்தது.
லேசான பனிப்பொழிவு இருக்குமென வானிலை மையம் கணித்திருந்த நிலையில், அதிகபட்சம் 28 சென்டி மீட்டர் வரை கொட்டிய பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.