ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர் பாலுவை விமர்சித்து ஜப்பானில் இருந்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவரின் தந்தையான திமுக பிரமுகரை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவியின் கணவர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
தனது மகன் வீடியோ வெளியிட்டதற்கு, தான் கட்டி வரும் வீட்டிற்கு மின் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடியாது என மிரட்டுவதாக திமுக பிரமுகர் ராமலிங்கம் குற்றஞ்சாட்டி உள்ளார்.