ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதையடுத்து கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் மற்றும் தீவனங்கள் கொண்டுவர தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
தமிழக - கேரள எல்லையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்படுத்துவதோடு, வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
புளியரை பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்ட எல்லையான நாடுகாணி, தாளூர், சோலாடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக கேரள வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.