நடிகர் கமல்ஹாசனின் ஆளுமை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த அவருடைய மாமா சீனிவாசன் உடல்நலக்குறைவால் கொடைக்கானலில் காலமானார்.
அவர் உடல் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கமல்ஹாசன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.