மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தியநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தார் வழிபாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பண்டைய பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள், தாயார் தையல்நாயகியை வழிபட்டு, மஞ்சள் தடவிய குச்சியை வீட்டில் வைத்து பூஜித்து அதனை பாதயாத்திரையாக கொண்டுவந்து கோயில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர்.
புதிய வேண்டுதலுக்காக மாற்றுக் குச்சியை எடுத்துச் செல்வதையும் நகரத்தார் மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.