சீனா மோனோ ரயிலில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் ஆர்வம்
Published : Apr 23, 2024 9:25 AM
சீனாவில் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
வுஹான் நகரில் இயக்கப்படும் மோனோ ரயிலில் அவர்கள் விரும்பி பயணம் செல்கின்றனர். பெரிய ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி அடிப்பகுதியுடன் கூடிய ரயிலில் பயணம் செய்தபோது செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவுக்கு ஒரு கோடியே 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது