ஏர் இந்தியா நிறுவனத்தின் கடைசி போயிங் 747 விமானம், மும்பையில் இருந்து புறப்பட்டுச்சென்றது. அமெரிக்காவில் ஃப்ளைன்பீல்டில் அந்த விமானம், சிறு சிறு பாகங்களாகப் பிரித்து அகற்றப்பட உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் முதல் போயிங் 747 விமானம், 1971-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி சேர்க்கப்பட்டது. ஏர் இந்தியாவிடம் இருந்த நான்கு போயிங் 747 விமானங்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் சர்வதேச பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த விமானங்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.