​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெப்ப அலையால் வாக்குப்பதிவு சதவீதம் குறையாமல் தடுக்கும் வழிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

Published : Apr 22, 2024 3:37 PM

வெப்ப அலையால் வாக்குப்பதிவு சதவீதம் குறையாமல் தடுக்கும் வழிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

Apr 22, 2024 3:37 PM

7 கட்டத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே முடிந்துள்ள நிலையில், வெப்ப அலையால் வாக்குப்பதிவு சதவீதம் குறையாமல் தடுக்கும் வழிகள் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை நடத்தியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத் துறையினர் பங்கேற்ற கூட்டத்தில் வெப்ப அலையால் வாக்குப்பதிவு சதவீதம் குறையாமல் தடுப்பது குறித்து ஆராயப்பட்டது.