​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகம் முழுவதும் அதிகரிக்கும் ராணுவ செலவினம்... ஸ்டாக்ஹோம் ஆய்வு நிறுவன அறிக்கையில் தகவல்

Published : Apr 22, 2024 1:56 PM

உலகம் முழுவதும் அதிகரிக்கும் ராணுவ செலவினம்... ஸ்டாக்ஹோம் ஆய்வு நிறுவன அறிக்கையில் தகவல்

Apr 22, 2024 1:56 PM

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற நாடுகள் இடையேயான போர் அதிகரிப்பால் உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவிடும் தொகை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற ராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் ராணுவத்திற்கான செலவு 2.4 ட்ரில்லியன் டாலராக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

உக்ரைன் 54 சதவிகிதமும், ரஷ்யா, இஸ்ரேல் நாடுகள் 24 சதவிகிதமும் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன. சீனாவால் அச்சுறுத்தலை சந்திக்கும் ஜப்பான் மற்றும் தைவான் ராணுவ செலவை 11 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.