இஸ்ரேல், உக்ரைன், காசா, தைவான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா 95 பில்லியன் டாலர் நிதி
Published : Apr 21, 2024 8:57 PM
இஸ்ரேல், உக்ரைன், காசா, தைவான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா 95 பில்லியன் டாலர் நிதி
Apr 21, 2024 8:57 PM
இஸ்ரேல், உக்ரைன், தைவான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ராணுவ நிதியாக 95 பில்லியன் டாலர் வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு சுமார் 17 பில்லியன் டாலர் நிதி அளிக்கப்பட உள்ளது. காசாவின் மனிதாபிமான உதவிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் உக்ரைனுக்கும் 61 பில்லியன் போர்க்கால நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியை இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தான சூழலை அதிகரிக்கும் என்று பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.