பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோழி, வாத்து மற்றும் பறவை தீவனங்களைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில எல்லைப் பகுதியான 8 சோதனைச் சாவடிகளிலும் கால்நடை மருத்துவர் குழுவுடன் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பும் சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்ட எல்லையோர பகுதியில் அமைந்துள்ள மலை கிராமங்களில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.