உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 8 மணி 35 நிமிடங்களுக்கு மேல் 8 மணி 59 நிமிடங்களுக்கு ரிஷப லக்கனத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
கோயில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருள உள்ளனர்.
மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் வெளிப்பிரகாரத்தில் சுற்றிலும் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற உள்ளது.