இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டம்
Published : Apr 17, 2024 6:28 PM
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூகுள் நிறுவன ஊழியர்கள் போராட்டம்
Apr 17, 2024 6:28 PM
இஸ்ரேல் ராணுவத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூகுள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலிபோர்னியா போலீசார் கைது செய்தனர்.
நிம்பஸ் என்ற பெயரில், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூடிங் பிராஜெக்டை கூகுள் நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்துக்கு தயாரித்துவருவதாக கூறப்படுகிறது.
இனப்படுகொலைக்கு துணை போவதாக கூறி சியாட்டில், நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.