அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில், கருவறை பால ராமர் நெற்றியில் சூரியக் கதிர்கள் நேரடியாக விழுந்த சூர்யாபிஷேகம் இன்று நடைபெற்றது.
சூரிய ஒளி நேரடியாக விழ முடியாத கருவறைக்குள், கண்ணாடி மற்றும் லென்சை வைத்து ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் வடிவமைத்த தொழில்நுட்பத்தால் கோயில் கோபுரத்தின் 3ஆவது தளத்தில் இருந்து சூரிய கதிர் பிரதிபலித்து 58 மில்லி மீட்டர் அளவுக்கு ராமர் நெற்றில் திலகம் போன்று ஜொலித்தது.
அயோத்தி நகரம் முழுவதும் 100 எல்.ஈ.டி திரைகள் வைத்து இந்த சூர்யாபிஷேக நிகழ்வை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.