அ.தி.மு.க. ஆட்சியில் இன்னென்ன திட்டங்களை செய்தோம் என்று கூறுவதைப் போல தி.மு.க. ஆட்சி குறித்து ஸ்டாலினால் சொல்ல முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மேச்சேரியில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அ.தி.மு.க. பிறப்பித்த அரசாணையை நீட்டிக்காமல் தி.மு.க. கிடப்பில் போட்டதால் தான் அது காலாவதியானதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜலகண்டபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட இ.பி.எஸ்., தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பிது உண்டா என்று கேள்வி எழுப்பினார்.
ஐந்தாண்டுகள் பா.ஜ.க.வுடனான கூட்டணி அரசில் இருந்த தி.மு.க., பின்னர் அங்கிருந்து விலகி 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தை குறிப்பிட்ட அவர், தி.மு.க.வுக்கு கூட்டணி தொடர்பாக என்ன கொள்கை இருக்கிறது என்று வினவினார்.