​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செருப்பு சின்னம் வாங்கினா வீட்ல கூட சேர்க்கல... கிரிவலத்திற்கு ஹெலிகாப்டர் வசதி: சுயேச்சை வாக்குறுதி

Published : Apr 16, 2024 6:37 AM

செருப்பு சின்னம் வாங்கினா வீட்ல கூட சேர்க்கல... கிரிவலத்திற்கு ஹெலிகாப்டர் வசதி: சுயேச்சை வாக்குறுதி

Apr 16, 2024 6:37 AM

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் செருப்பு சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜெகநாதன் கழுத்தில் செருப்பு மாலை அணிந்து கொண்டு தனி ஒருவராக திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார்.

துண்டு பிரசுரம் வழங்கியவரை விநோதமாக பார்த்து சிரித்து விட்டு கடந்து சென்றனர் பொதுமக்கள்.

செருப்பை சின்னமாக எடுத்ததால் கார் ஓட்டக் கூட டிரைவர் வராததால் ஒற்றை ஆளாக வாகனம் ஓட்டிக் கொண்டே பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதாக கூறிய ஜெகநாதன், இந்த சின்னத்தை தனது தாய் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என அப்பாவியாக கூறினார்

தான் வெற்றி பெற்றால், திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி செய்து தருவதோடு, 100 நாள் வேலையை 365 நாட்களாக அதிகரிப்பேன் எனவும் அள்ளி விட்டார் ஜெகநாதன்.