சென்னையில் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளில் இருந்து வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்வதில் வழக்கமான நேரத்தை விட தாமதம் ஏற்பட்டதால், சில இடங்களில் பாலுக்காக காத்திருந்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக பால் விநியோகத்தில் ஈடுபடும் நூற்றி 23 வாகனங்களில் 2 வாகனங்கள் மட்டும் சற்று தாமதமாக சென்றதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.