ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை டெல்லியில் அக்கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் போல, வசிக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்கும் வகையில் பொது வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் வந்தே பாரத் மெட்ரோ, ஸ்லீப்பர் உள்பட 3 வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
நாட்டின் தொன்மையான மொழியான தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன் திருவள்ளுவர் கலாச்சார மையம் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முத்ரா கடன் பெறுவதற்கான உச்சவரம்பு 20 லட்சமாக அதிகரிக்கப்படும்என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ((GFX OUT))