சென்னை கோயம்பேட்டில் அதிவேகமாகச் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் மாநகராட்சி ஒப்பந்த குடிநீர் டேங்கர் லாரி ஒன்று, சாலை நடுவே உள்ள செண்டர் மீடியனில் மோதியது.
இதில் முன்பக்க சக்கரங்கள் கழன்று ஓடிய நிலையில், டேங்கரில் இருந்த தண்ணீர் சாலையில் வழிந்தோடியது.
லாரியை அகற்றிய போலீசார், தலைமறைவான ஓட்டுநரை தேடுவதாக தெரிவித்துள்ளனர்.