பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என லோக்நீதி - சி.எஸ்.டி.எஸ். இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 10,000 வாக்காளர்களிடம் ஆய்வு நடத்தி வெளியிடப்பட்டதாக கூறப்படும் அறிக்கையில், பிரதமர் மோடியின் தலைமை, உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயர்வு ஆகியவை பா.ஜ.க.வுக்கு சாதகமாக அம்சமாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய சூழலில் பாஜக.வுக்கு சவால் விடுக்கக் கூடிய போட்டியாளர்கள் யாரும் இல்லை என்பதும் மீண்டும் வெற்றி பெற காரணமாக கூறப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அதிகரித்துள்ள ஆதரவாலும் இண்டியா கூட்டணியை விட பாஜக. கூட்டணிக்கு 12% கூடுதல் வாக்கு கிடைக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.