இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டத்தைக் கைவிடும்படி ஈரானுக்கு பைடன் எச்சரிக்கை
Published : Apr 13, 2024 12:07 PM
இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டத்தைக் கைவிடும்படி ஈரானுக்கு பைடன் எச்சரிக்கை
Apr 13, 2024 12:07 PM
இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் நிலை உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் முடிவைக் கைவிடும்படி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அப்படி தாக்குதல் தொடுக்கப்பட்டால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு ஆதரவளித்துப் பாதுகாக்க அமெரிக்கா உறுதிபூண்டிருப்பதாகவும், ஈரான் தனது முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் ஜோ பைடன் கூறினார்.