தமிழகத்திற்கு வருவதை நான் எப்போதும் நேசிக்கிறேன் - ராகுல் காந்தி
Published : Apr 12, 2024 4:01 PM
தமிழகத்திற்கு வருவதை நான் எப்போதும் நேசிக்கிறேன் - ராகுல் காந்தி
Apr 12, 2024 4:01 PM
தமிழகத்திற்கு வருவதை நான் எப்போதும் நேசிக்கிறேன் - ராகுல் காந்தி
நான் தமிழ்நாட்டு மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன் - ராகுல்
தமிழ்நாடு மக்களின் கலாச்சாரம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவை எனக்கு மிகச்சிறந்த ஆசான் - ராகுல்
எனக்கு தமிழ் மொழியில் பேசத் தெரியாது என்றாலும், தமிழ் பண்பாட்டு கூறுகளை அறிந்து கொள்கிறேன் - ராகுல்
நீங்கள் உலகத்திற்கு பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை அளித்திருக்கிறீர்கள் - ராகுல்
சமூகநீதி பார்வையில் எப்படி நடப்பது என்பதை தமிழ்நாடு நாடு முழுமைக்கும் காட்டிக் கொண்டிருக்கிறது - ராகுல்
தமிழகத்தின் ஜாம்பவான்கள் எதற்காக போராடினார்களோ அதற்காக தான்
குமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ நடைபயணம் மேற்கொண்டேன்
கடந்தகாலம் மற்றும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கியபடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வருகிறேன்
தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றில் இருந்து நான் ஒவ்வொரு முறையும் பாடம் கற்றுக்கொள்கிறேன்
நான் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு வரும்போதும், தமிழக மக்கள் பேரன்பை வெளிப்படுத்துகிறார்கள்
தமிழ்நாட்டு மக்களுடனான உறவு அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவு ஆகும் - ராகுல்
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடியபோது அவர்களது வலியை எனது வலியாக உணர்ந்தேன் - ராகுல்
இந்தியாவில் இரு தத்துவங்களுக்கு இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது - ராகுல்
போரின் ஒருபுறம் பெரியாரின் சமூகநீதியும், மறுபுறம் ஆர்எஸ்எஸ் தத்துவங்களும் உள்ளன - ராகுல்
இந்தியாவில் உள்ள மொழிகளில் எந்த வகையிலும், தமிழ் மொழி குறைந்ததில்லை - ராகுல்
தமிழ் வெறும் மொழி இல்லை, இது தமிழக மக்கள் தங்களை உணருவதற்கான வாழ்வியல் முறை
தமிழ் மீது நடத்தப்படும் தாக்குதல், தமிழர்கள் மீதான தாக்குலாகவே கருதப்பட வேண்டும்
உங்கள் மொழி, பாரம்பரியம், வரலாறு போன்றவை எங்களுக்கும் எங்கள் அரசியலுக்கும் மிகவும் முக்கியமானவை
தமிழ், வங்காளம் உள்ளிட்ட மொழிகள் இல்லாமல் இந்தியா என்ற நாடே இல்லை
அனைத்து மக்களும், அவர்களின் கலச்சாரமும், அவர்களின் பாரம்பரியமும் புனிதமானது என்று நாங்கள் கூறி வருகிறோம்
அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதை வலியுறுத்தி வருகின்றனர்
அவர்களின் கொள்கையால் நாடு முழுக்க வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து 83% இளைஞர்கள் சிரமத்தில் உள்ளனர்.
பிரிட்டிஷாரின் காலத்தை விட தற்போது ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக உள்ளன
25 பெருங்கோட்டீஸ்வர்கள் நமது நாட்டின் 75% பணத்தை தங்களிடம் வைத்துள்ளனர்
நாட்டில் ஒவ்வொரு நாளும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசு பெரும் பணக்காரர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்கிறது
தமிழ்நாட்டைச் சாராத 2, 3 தொழிலதிபர்கள் மட்டுமே அரசின் அனைத்து ஒப்பந்தங்களையும் பெறுகின்றனர்
பிரதமருக்கு நெருக்கமாக இருப்பதால் அதானிக்கு மட்டுமே துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சீர்குலைக்கப்பட்டுள்ளன
நாட்டின் அனைத்தும் அரசு நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்.ஸை சார்ந்தவர்கள் நிரம்பி இருக்கின்றன
இ.டி., ஐ.டி., சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் முகமைகள் மத்திய அரசின் கைப்பாவைகளாக பயன்படுத்தப்படுகின்றன
மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்
நாட்டின் 3, 4 பெருங்கோட்டீஸ்வர்களுக்கு நாட்டின் வளங்களை தாரை வார்க்கவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றனர்
தமிழ்நாடு வெள்ள நிவாரணத் தொகை கேட்கும் போது அதை மத்திய அரசு நிராகரித்து வருகிறது
தமிழர்கள் உதவி கேட்கும் போது அதை பிச்சை என்று அழைத்து இழிவுபடுத்துகின்றனர்
தமிழக மீனவர்கள் உதவி கேட்கும் போது அதற்கு மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது
அரசியல் சாசனத்தை மாற்றப் போவதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்
இந்தியாவை ஜனநாயகத்தின் அடையாளமாக உலக நாடுகள் கூறி வந்த நிலை மாறி, தற்போது ஜனநாயகம் இல்லாத நாடாக பார்க்கின்றன
நாட்டின் இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருக்கும் நிலையை மாற்றி, அவர்களுக்கான வேலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்
தற்போது 30 லட்சம் காலிப் பணியிடங்கள் மத்திய அரசில் உள்ளன, அவை இளைஞர்களுக்கு வழங்கப்படும்
பணக்கார குடும்பங்களின் பிள்ளைகள் வேலை கிடைக்கும் முன் தொழில் பழகுநர்களாக இருப்பார்கள்
சுமார் 6 மாத காலம் அவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி தொழிலை பழகிக் கொள்வார்கள்
அதே போல நாடு முழுக்க படித்த பட்டதாரிகள் அனைவரும் தொழில் பழகுநர்களாக பயிற்சி பெறுவதை உறுதி செய்ய சட்டம் நிறைவேற்றப்படும்
இந்திய இளைஞர்கள் அனைவரும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் தொழில் பழகுநர்களாக பயிற்சி பெற உரிமை கிடைக்கும்
அவர்கள் பயிற்சி பெறும் ஓராண்டு காலத்தில் அரசு 1 லட்ச ரூபாய் பயிற்சி ஊதியம் வழங்கப்படும்
தொழில் பழகுநர்களாக சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அந்தந்த இடங்களில் வேலை உறுதி செய்யப்படும்
தமிழ்நாட்டு மக்களுக்கு நீட் தேர்வில் பெரிய பிரச்சினை இருப்பது எனக்குத் தெரியும்
நீட் தேர்வு தேவையா, இல்லையா என்பதை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு விட இருக்கிறோம்
தமிழக மக்கள் எப்படி கல்வி பயில வேண்டும், அதன் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது தமிழக மக்களின் உரிமை
நீட் என்பது ஏழைகளுக்கு எதிரான தேர்வு என்பதால் அது குறித்த முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்
தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதை நாமெல்லாம் பார்த்தோம்
விவசாயிகளுக்கு சட்டபூர்வமாக குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க இருக்கிறோம்
ஒவ்வொரு விவசாயியும் சட்ட ரீதியாக குறைந்தபட்ச ஆதார விலையை பெறும் உரிமையைப் பெறுவார்
நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடியை நாங்கள் வழங்குவோம்
தமிழக பெண்கள் நமது எதிர்கால தலைமுறையினரை பாதுகாத்து, அவர்களை வளர்க்கின்றனர்
ஆண்களைப் போல பெண்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை
நாட்டின் ஏழைப் பெண்களுக்கு அருமையான திட்டம் ஒன்றை நாங்கள் கொண்டு வர உள்ளோம்
வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களில் ஒரு பெண்ணை தேர்வு செய்து ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வங்கியில் வரவு வைப்போம்
இந்தியாவில் இருந்து வறுமையை நிரந்தரமாக ஒழிக்க உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறோம்
பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50% ஒதுக்கீட்டை வழங்குவோம்
பிரதமர் மோடி கூறியதைப் போல இல்லாமல் உடனடியாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50% இட ஒதுக்கீடு வழங்குவோம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியம் இரண்டு மடங்கு ஆக்கப்பட உள்ளது
விவசாயிகளைப் போலவே முக்கியமானவர்களான மீனவர்களை பிரதமர் கண்டுகொள்ளவில்லை
உயிரை துச்சமாகக் கருதி கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவர்களுக்கு தனி வாக்குறுதிகளை வழங்குகிறோம்
டீசலுக்கு மானியம், படகுகளுக்கு கடன், கடன் அட்டைகள், உள்நாட்டு மீன்பிடிப்பை விவசாயமாக அங்கீகாரம் போன்றவை வழங்கப்படும்
உங்கள் வரலாறு, பாரம்பரியம், கலாசாரம், மொழிக்கான தத்துவப் போராட்டம் இது
தமிழக மக்களின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்றை பாதுகாக்க காங்கிரசும் நானும் உடன் இருப்போம்
பூமியின் எந்த சக்தியும் தமிழக மக்களுக்கு, தமிழுக்கு, தமிழ் பாரம்பரியத்துக்கு ஊறு ஏற்படுத்த முடியாது
இந்திய ஜனநாயகம், அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக நடக்கும் இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்