மயிலாடுதுறையை அடுத்து, அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் பொன்பரப்பியில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானதை அடுத்து அங்கு 22 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை வனத்துறையினர் பொருத்திவருகின்றனர்.
பொன்பரப்பியில் அரசு மருத்துவர் வீட்டின் அருகே சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டுள்ள நிலையில், அது மயிலாடுதுறையில் போக்கு காட்டிய சிறுத்தையா? அல்லது வேறு ஒரு சிறுத்தையா? என்பதை உறுதி செய்யமுடியவில்லை என்று கூறிய வனத்துறை அதிகாரிகள், அதை உறுதி செய்யவே கேமிராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தனர்.