நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 20 கோடி ரூபாயை செலவழிக்க முடியாத சு.வெங்கடேசனுக்கு மக்கள் பணி சரிவராது என்று அதிமுக எம்எல்ஏ MLA ராஜன் செல்லப்பா விமர்சித்தார்.
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகருக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சு.வெங்கடேசன் கதை எழுத போகலாம் என்று கூறினார்.