தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து நாசம் செய்திருப்பதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பவானியில் பரப்புரை செய்த போது பேசிய அவர், மக்களை குடிகாரர்கள் ஆக்கி, அனைத்து இடங்களிலும் போதை பொருள் விற்பனை செய்து நாசம் செய்துள்ளதாக விமர்சித்தார்.