சென்னை கோயம்பேட்டில் வெங்காய மண்டி வைத்திருக்கும் ராமஜெயம் என்பவரை அணுகிய ராகுல் என்ற நபர், தன்னிடம் புதையலாகக் கிடைத்த பழங்கால நகை உள்ளதாகவும் அதனை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்றும் கூறி, முதலில் அசல் தங்க நகை ஒன்றைக் காட்டியதாக தெரிகிறது.
அதனை நம்பி 20 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசிய ராமஜெயம், மறுநாள் முன் பணமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து நகையை வாங்கி வந்துள்ளார். இம்முறை அந்நபர் கொடுத்தது போலி நகை என்று தெரியவந்ததையடுத்து, அவர் போலீசில் புகாரளித்தார்.