நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரசாரத்தின் முடிவில் இரண்டு பாடல்களைப் பாடி வாக்கு சேகரித்தார்.
முதலமைச்சர் பதவியை இளைஞர்களுக்கு கொடுப்போம் என நினைத்து பெருந்தலைவர் காமராஜர் பதவி விலகியது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்றும், அண்ணாவுக்குப் பிறகு ஆட்சி அதிகாரம் நெடுஞ்செழியனுக்குப் போகாமல் கருணாநிதியிடம் போனது தமிழ் இனத்துக்கு கட்டப்பட்ட முதல் சமாதி என்றும் சீமான் பேசினார்.
முன்னதாக, பரமத்திவேலூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், உழைக்கும் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், மாற்றத்தைக் கொண்டுவந்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.