இந்தியா, சீனா இடையேயான உறவு, இருநாடுகளுக்கு மட்டுமின்றி ஆசியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், சீனாவுடன் இந்தியாவிற்கு நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுவது அவசியம் என்றார்.
உலகிற்கே ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குவதாகவும் உத்திரமேரூரில் உள்ள 1100 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இந்திய ஜனநாயகம் குறித்த குறிப்புகளே இதற்கு சாட்சி எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மதம், மொழி, இனத்தால் இந்தியாவில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படவில்லை என்றும் உள்நாட்டிலும் மேற்கத்திய நாடுகளிலும் இந்திய மக்களிடம் தொடர்பில் இல்லாத சிலர் பொய் பரப்புரை மேற்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.