விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை பிரசார வாகனத்திலிருந்து கழற்றி வைத்து விட்டு தான் தங்களது ஊருக்குள் வர வேண்டுமென விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை கிராமத்தில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவர்களுடன் திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபடவே விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாருக்காக வாக்கு சேகரிக்க வந்திருந்த திமுக எம்எல்ஏ மணிகண்ணன் மற்றும் போலீஸார் சமாதானப்படுத்தினர்.