கோவையில் 4000 கோடி ரூபாய் செலவிட்டு கிரிக்கெட் அரங்கம் கட்டுவதற்கு பதில் நூறடிக்கு ஒரு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கலாமே என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கோவை சரவணம்பட்டியில் பேட்டியளித்த அவர் இவ்வாறு வினவினார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக தாங்கள் செய்யும் தவறு தெரியக் கூடாது என்பதற்காக தி.மு.க. எதிர்க்கட்சிகளின் மீது குற்றஞ்சாட்டுவதாகவும், பணப்பட்டுவாடா பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தார்மீக உரிமையே இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தமக்கும் பணம் பிடிக்கப்பட்டதற்கும் சம்மந்தமில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்த பிறகும் எதிர்க்கட்சியினர் தேவையின்றி அரசியல் செய்வதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமல் கூறினார்.