கோவையின் குடிநீர் பிரச்னை, பழுதடைந்த சாலைகளை சரி செய்யமுடியாத முதலமைச்சர், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் என அறிவித்துள்ளதை மக்கள் நம்ப மாட்டார்கள் என கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அஞ்சுகம் நகர், சிவானந்தபுரம், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார் அவர், தூய்மையான நகரம் பட்டியலில் 2022-ல் 42வது இடத்தில் இருந்த கோயம்புத்தூர் 2023-ல் 182-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கிரிக்கெட் ஸ்டேடியம் வேண்டும் என யாரும் கேட்காத நிலையிலும், கமிசன் அடிக்கலாம் என்ற நோக்கில் முதலமைச்சர் ஸ்டேடியம் கட்ட முயற்சிப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தான் வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதல் நவோதயா பள்ளி கோவையில் தொடங்கப்படும் எனக்கூறி அண்ணாமலை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.