கிருஷ்ணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து மத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்களுடைய ஓட்டை எங்களுக்குப் போடுங்கள், போடாமல் போங்கள், ஆனால் வேறு எவருக்கும் போட்டு விடாதீர்கள் என்றார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பிரச்சாரக் கூட்ட மேடையில் பேசிய சீமான், 10 ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருந்துவிட்டு, கச்சத்தீவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிந்துகொண்டேன் என்று கூறுவதாக, அண்ணாமலையை விமர்சித்தார்.