மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று தமிழக முதலமைச்சர் கூறுவது சிறந்த நகைச்சுவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு விமர்சனம் செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதும், அத்தைக்கு மீசை முளைப்பதும் ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார்.
திமுக அளித்துள்ள வாக்குறுதிகளை சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு அரசின் நிதி நெருக்கடி தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை என்று விமர்சித்துள்ளார்.