உடல்நலக்குறைவால் காலமான விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புகழேந்தி உடலுக்கு அவரது மகன் செல்வகுமார் இறுதி சடங்குகளை செய்தார்.