5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ திடீரென அறிவித்துள்ளார்.
பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று தனது மருத்துவக் குழு கண்டிப்பாக அறிவுறுத்தியதை அடுத்து, ஓய்வு முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
கள பிரச்சாரத்தில் இல்லை என்றாலும், சமூக வலைதளம் மூலம் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன் என்றும் குஷ்பூ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்