​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் அஜெண்டா: முதலமைச்சர்

Published : Apr 07, 2024 3:30 PM

அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் அஜெண்டா: முதலமைச்சர்

Apr 07, 2024 3:30 PM

அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் அஜெண்டா என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது பேசிய அவர், மாநிலங்களை மாநகராட்சிகள் போலவும், புதுச்சேரியை பஞ்சாயத்து போலவும் மத்திய அரசு நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.  

புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை என விமர்சித்த முதலமைச்சர், ரேஷன் கடைகளை மூடி ஏழைகளின் வயிற்றில் ஆட்சியாளர்கள் அடித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.