காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனை முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அங்கு முற்றிலும் சிதைக்கப்பட்ட 5 சடலங்கள் இருந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அல்-ஷிஃபா மருத்துவமனையில் தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தியது. அதன்பிறகு அந்த இடத்தைப் பார்வையிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு, மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.