தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு. முருகானந்தத்தை ஆதரித்து ஒரத்தநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட டி.டி.வி.தினகரன், தாமும் தஞ்சாவூரில் போட்டியிட விரும்பியதாக தெரிவித்தார்.
காலத்தின் சூழ்ச்சியால் தாமும், ஓ.பன்னீர் செல்வமும் பிரிந்து இருந்ததாகவும், இனி யாராலும் தங்களை பிரிக்க முடியாது என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.