ஈக்வடாருடன் தூதரக உறவைத் துண்டித்துக்கொள்வதாக மெக்ஸிகோ அதிபர் அறிவிப்பு
Published : Apr 06, 2024 5:59 PM
ஈக்வடார் நாட்டுக்கான மெக்ஸிகோ தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் கிளாஸை ஈக்வடார் போலீஸார் அத்துமீறி நுழைந்து கைது செய்ததையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை சர்வதேச விதிகளை மீறிய செயல் எனக் கண்டித்த மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், ஈக்வடாருடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஈக்வடார் துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் கிளாஸ், ஊழல் குற்றச்சாட்டுகளில் இரண்டு முறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.