​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ காலமானார்

Published : Apr 06, 2024 10:52 AM

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ காலமானார்

Apr 06, 2024 10:52 AM

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ காலமானார்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புகழேந்தி காலமானார்

ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக புகழேந்தியின் குடும்பத்தினர் தகவல்

விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்

கோலியனூர் ஒன்றிய சேர்மனாக பதவி வகித்த புகழேந்தி 2019ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்

2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக புகழேந்தி தேர்வானார்

விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்