பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது பற்றி பாமகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு பதிலளித்தார்.
தங்களை துரோகிகள் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிதான், அவரை கைதூக்கி விட்டவர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.