​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா புழக்கத்தை கிராமங்களுக்கு கொண்டு வந்ததே திமுகவின் சாதனை : அண்ணாமலை

Published : Apr 04, 2024 3:36 PM

கஞ்சா புழக்கத்தை கிராமங்களுக்கு கொண்டு வந்ததே திமுகவின் சாதனை : அண்ணாமலை

Apr 04, 2024 3:36 PM

2019 ஆம் ஆண்டு பாஜக அளித்திருந்த 295 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக குறிப்பிட்ட அண்ணாமலை, இதே போன்று நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வைக்க திமுக தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, பவானி அருகேயுள்ள கவுந்தப்பாடியில் பிரச்சாரம் செய்த போது அண்ணாமலை, இதனை தெரிவித்தார்.

திமுகவிற்கு அளிக்கும் வாக்கு பிரியோஜனம் இல்லாதது என்று தெரிவித்த அண்ணாமலை, கஞ்சா புழக்கத்தை கிராமங்களுக்கு கொண்டு வந்ததுதான் திமுக ஆட்சியின் சாதனை என்று விமர்சித்தார்.

பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பணன் தனியாக கல்லூரி நடத்தி வருவதால் தான், கவுந்தப்பாடி பகுதியில் அரசு கல்லூரி கொண்டுவரவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.