திருப்பத்தூர் மாவட்டம் கைலாசகிரி மலைசாலையில் நண்பருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது குரங்கு பறித்துச் சென்ற செல்போனை மீட்க ஓடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கொட்டமிட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தரணிவேல் நண்பருடன் ரன்னிங் பயிற்சி முடித்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது அவரது செல்போனை குரங்கு பறித்துச் சென்றது.