அண்ணாமலை எடுத்தது போலீஸ் டிரைனிங், நான் எடுத்தது போராளி டிரைனிங் : சீமான்
Published : Apr 04, 2024 7:50 AM
அண்ணாமலை எடுத்தது போலீஸ் டிரைனிங், நான் எடுத்தது போராளி டிரைனிங் : சீமான்
Apr 04, 2024 7:50 AM
இதுவரை 750 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவரையாவது இந்திய ராணுவம் காப்பாற்றியது என்று ஒரு செய்தியாவது படித்திருக்கிறோமா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சி தென் சென்னை வேட்பாளர் தமிழ்செல்வியை ஆதரித்து மயிலாப்பூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், மீனவர்களை பாஜக அரசு காப்பாற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்து இருப்பது போலீஸ் டிரைனிங், ஆனால், நான் எடுத்து இருப்பது போராளி டிரைனிங் என்றும் சீமான் விமர்சித்தார்.
தேர்தலில் நிறுத்த ஆள் வைத்திருக்கிறாரா என்று கேட்ட கட்சியில் தற்போது நிற்க ஆள் இல்லை என்ற அவர், இது தான் வரலாறு என்று கூறினார்