நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசா குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கொணவக்கரை, அரவேனு உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஆ.ராசா, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்