தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி விளாத்திகுளம் சட்டமன்றத்துக்கு உள்பட்ட இடங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறினார்.
கனிமொழி பிரச்சாரத்தின்போது, பெண் ஒருவர், நூறு நாள் வேலையில் ஊதியம் வரவில்லை என்று புகார் கூறினார். அவரிடம் 100 நாள் வேலைக்கு பிரதமர் மோடி சரியாக பணம் தரவில்லை.என்றும். ஆட்சி மாறியதும் வழங்கப்படும் என்று கனிமொழி பதிலளித்தார்